Monday 28 October 2013

வெண்டுவன் கூட்ட வரலாற்று புத்தகங்கள்:

கீழ்க்கைர அரைய நாட்டு கோளாரம், தாழக்கரையின் வரலாற்றுச் செய்திகள் அடங்கியது. மாரியம்மன் வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாட்டுத் தொடக்கம் ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளது. விரிவான வேண்டுவண் குலச் செய்திகள் அடங்கியுள்ளது.



திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தொன்மையான ஊர் கொங்கூர். இதன் பழம் பெயர் 'கொங்கு' என்பதாகும். இவ்வூர்ப் பெயரே நாட்டுப் பெயராகக் 'கொங்கு' எனப்பட்டது என்ற கருத்தும் உண்டு. பெரியாழ்வார் பாசுரத்தில் இடம்பெறும் 'கொங்கு' இவ்வூரே என ஆய்ந்து நிறுவப்பட்டுள்ளது. ராமானுசரை வரவேற்று உபசரித் கொங்குப் பிராட்டியார் இவ்வூரினரே என்று கூறப்பட்டுள்ளது. இவரது கணவர் 'கொங்கிலாச்சன்' வைணவ சிம்மாசனாதிபதிகள் 74 பேரில் ஒருவர். வைணவச் சிறப்புடைய ஊரின் பெருமை கூறப்பட்டுள்ளது.

கரூர் வட்ட ஆரியூர் செல்லாண்டியம்மன் கோயில் காணியாளர் வரலாற்றுடன் இடைப்பிச்ச நாடு, ஆரியூர் பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. வெண்டுவன் குலத்தார் கம்பருக்கு அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்த செய்தி இலக்கிய மேற்கோளுடன் இடம் பெற்றுள்ளது.


No comments:

Post a Comment