Sunday 27 October 2013

வெண்டுவன் கூட்ட குலகுரு மடங்கள்

வெண்டுவன் கூட்ட குலகுரு மடங்கள்:

குலகுருவின் மகத்துவம்:

 
 || ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
     நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம் ||


தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!
- திருமந்திரம்

குரு என்றால் இருளை விலக்குபவர் என்று பொருள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நமது மரபில் நமது முன்னோர் சிறந்து விளங்கினர். மாதாவால் நாம் உண்டாகிறோம், பிதாவால் குலம் வருகிறது. இங்ஙனம் வரும் குலத்தால் நமது குலகுருவும், குலதெய்வமும் கிடைக்கின்றன.
ஆயிரம் தாய்மார் இருந்தாலும் நமது தாய் வழியாகத்தானே தாயன்பை பெற்று உணர்கிறோம்! அதேபோல ஆயிரம் குருக்கள், தெய்வங்கள் இருப்பினும் நமது குலகுரு, குலதெய்வம் மூலமே நன்மை சித்திக்கும்.

தாய் தந்தையைக் காட்டுகிறாள், தந்தை குருவையும், குரு தெய்வத்தையும் காட்டுவதே நமது மரபு. தேவர்களுக்குக் குலகுரு பிருகஸ்பதி, அசுரர்களுக்கு சுக்கிராச்சாரி. இவர்கள் தத்தம் சிஷ்யர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டே செயல்கள் புரிந்து வந்ததனைக் காண்கிறோம். இதேபோல் அரசர்கள்தம் குலகுருக்கள் அவ்வரசர்களுக்கு நல்வழி காட்டியதனையும் ராமாயணம் போன்ற இதிகாசங்களின் வழி அறிகிறோம்.

குருவின் மகத்துவத்தினை உணர்த்த திருமூலர் தமது திருமந்திரத்தில் குருவே மனிதனுக்கு சிவம் என்கிறார்:

"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உறையுணா பெற்றதோர் கோவே"

இதே கருத்தினை ஆதிமறையாகிய வேதங்களும் கூறுகின்றன :

"குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு 
குருர் தேவோ மகேச்வர: 
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீகுரவே நம:"


(பொருள்: குருவே பிரம்மன் அதாவது படைப்பவர், அவரே விஷ்ணு மற்றும் சிவன், அதாவது காத்து, மாற்றமும் அளிப்பவர் என்பதால் அவரே சாட்சாத் கடவுளுமாகிறார். அத்தகைய குருவினை நமஸ்கரிக்கிறேன்)

கொங்கதேசத்தில் இதனை உணர்ந்தே இத்தேசத்திற்கான பூர்வகுடிகள் 51 ஆதிசைவ ஆதீனங்களைநிறுவினர். இவ்வாதீனங்கள் குருகுலங்கள், குருமடாலயங்கள் என்று அழைக்கப்பட்டன. "அய்யம்பாளையம்", "குருக்கள்பட்டி" , "குருக்கள்பாளையம்" என்று ஊர்களையே கொங்கர் தத்தமது குருக்களுக்களித்து மகிழ்ந்தனர். கொங்கர் கொங்கதேசம் வருகையிலேயே குருக்களையும் அழைத்து வந்தனர் என கொங்கு காணிப்பட்டயம் கூறுகிறது (கொங்கு வெள்ளாளர் செப்பேடு பட்டயங்கள் (2007), கொங்கு ஆய்வு மையம், புலவர் செ. ராசு). 

குருக்களே அக்காலத்தில் திருமணங்களை நிச்சயித்து வந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "வேதியன் பக்கம் விரைவுடனே சென்று"என்ற வரி மூலம் உணரலாம். கொங்கர் திருமணத்தின் ஆரம்பமே இதுதான். ஏனெனில் பிரும்மச்சாரிகள் அனைவருக்கும் குருவே பொருப்பு. இதனால்தான் "பிரும்மச்சரியங்கழித்தல்" என்ற சீரும் உள்ளது.

இதேபோல் கைகோர்வை சீரின் பொழுது குருக்கள் மறைகூறி ஆசி தந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "மறையோர்கள் ஆசிகூற" என்ற வரிமூலம் உணரலாம். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கவும், ஆசி கூறவும் செய்த குருக்களுக்கு "மங்கிலியவரி" எனும் மாங்கல்யவரியையும் செலுத்தி வந்துள்ளனர்.

மேலும் குருவிடம் பாதபூசை செய்து, சஞ்சார காணிக்கையாக அவர்களால் முடிந்ததை மனமுவந்து அளித்து, அவர் சொற்படி தீட்சை மகாமந்திரம் உபதேசம் பெற்றுவந்துள்ளனர். ஒவ்வொரு ஆதீனத்திடமும் குறைந்தது 50 தலைக்கட்டுக்கான காணிக்கைக் கணக்கு ஓலைகள் உள்ளன. இவை சரித்திர ஆவணங்களாகும்.

இன்றும் குலகுருக்களை போற்றும் கோத்திரத்தார் நன்றாக பல்கிப்பெருகி உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு நிரந்தர குருபலம் உண்டு. இவற்றை சரியாக செய்யாமல் குருவுக்குக்கொடுத்த வார்த்தை தவறியவர்களே திருமணமின்மை, துன்பங்கள், குடும்பச்சிக்கல்கள், குழப்பங்கள் போன்று துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.

என்னுடைய அனுபவத்தில் குலகுருக்களை மீண்டும் கண்டு ஆசிபெற்று துன்பங்களினின்று மீண்டு வாழ்பவர்கள் ஏராளம். குலகுருவால் தீராத பிரச்சனைகளே இல்லை.

"குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி
"குருபீடம் உயர குடி உயரும்" குரு எவ்வாறு உள்ளார் என்பதனைக் கொண்டே குடிகளின் நிலையும் இருக்கும் என்பது கண்கண்ட உண்மை.

திருமந்திரத்தில் ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம் பற்றிய பதிகங்கள் மேலும் குருவின் சிறப்புகளை விவரிக்கின்றன:
http://www.tamilvu.org/slet/servlet/l4100.l41A0son?x=1549&y=1564

மேலும் குருபுஜை என்ற ஏழாம் தந்திரப் பதிகங்கள் குருவின் சிறப்புகளை கூறுகையில்:
http://www.tamilvu.org/slet/servlet/l4100.l41A0son?x=1814&y=1821
British accounts on our spiritual system (ultimately used by their and our government to destroy the system):

Account 1:

"Their Gurus are the Siva Brahmanas, or Brahmans who act as Pujaris in the temples of

Siva, and the great gods of his family. These are considered as
greatly inferior to the Smartal, either Vaidika, or Lokika. The
Guru comes annually to each village, distributes consecrated
leaves and holy water, and receives a Fanam from each person,
with as much grain as they choose to give. Some of them purchase an Upadesa
from the Guru; giving for it, according to their circumstances,
from one to ten Fanams. Those who have procured this may make
a Lingam of mud, and perform Pujas worship to this rude emblem
of the deity, by pouring flowers and water over it while they repeat
the Upadesa. Such persons must abstain entirely from animal food.
Those who have no Upadesa must pray without any set form, but
are allowed to eat the flesh of sacrifices." Pg 330.

- FRANCIS BUCHANAN, M. D, Vol. II, JOURNEY FROM மெட்ராஸ் THROUGH THE COUNTRIES OFMYSORE, CANARA, AND MALABAR, 1807 

Account 2:

"Each Nad has its Brahman Guru. The Guru of Morur and
Molasi Nads is by caste a Gurukkal, and he lives in Natta-
Kadayur , in Kangayam Nad of Coimbatore. The Gurus of
Malla-samudram and Parutti-palli Nads are also Gurukkal
Brahmans, the Guru of the former living at Ayyam-palaiyam, in
Paramati Division, his title being Immudi Sitambala Nayinar,
and the Guru of the latter Nad residing at Kallan-kulam in Salem
Taluk. The Guru of Easipuram Nad is a Dikshitar and lives at
Pasur in Erode Taluk."

- F. J. Richards, ICS, Salem, Madras district gazetteers, Vol.1, 1918

Website of Nagasamy, Director, TN Archeology dep.,
http://www.tamilartsacademy.com/journals/volume5/articles/article7.xml

Wikipedia:
http://en.wikipedia.org/wiki/Kongu_Vellalar#Honoured_Saivacharyas
Account 3

"Konganattu Brahman", a separate and distinct community in kongu region was referred in the following document (Page 6). 

Report on the various census of British India, Eyre and spottis woode printing, London , Page 6, Volume III, 1881

Account 4
The former Archeological Survey of Tamilnadu Director Thiru. Nagaswamy have referred about Kongu Shiva Brahmanars and their Gothrams in his website.

Account 5

கொங்கு மண்டலத்தில் சோழன் ஸ்ரீகாழி பிராமணர்களை குடியேற்றும் முன்பே கொங்கு நாட்டில் குருத்வமும் உடைய பிராமணர்களும், ஸ்தானிகர்களும் இருந்தததாக கார்மேக கவிஞர் கொங்கு மண்டல சதகத்தில் கூறியுள்ளார்.
  "குலசேகரன் குலோத்துங்கன் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த்
   தலபூசை நன்குறத் தன்னாடு உலாரிற் சமர்த்தர் கண்டு 
  நிலையான காணியும் மென்மையு மிய நிதானமுற்று
 வலவாதி சைவர்கள் வாழ்வதன்றோ கொங்கு மண்டலமே" 


காணி
மடம்
ஆரியூர்
ஆரியூர்
கூடலூர்
கொல்லன்கோயில்
தோக்கவாடி
தோக்கவாடி
கூனவேலம்பட்டி
வீரகுட்டை
கூடலூர்
தாளக்கரை
மடத்தின் பெயர்களில் கிளிக் செய்து மடம் குறித்த முழு தகவல்களை பெற்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment